சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: முத்தரசன்

சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குடியரசு தினத்தன்று கொரோனாவை காரணம் காட்டி…

சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குடியரசு தினத்தன்று கொரோனாவை காரணம் காட்டி கிராம சபை கூட்டங்களை ரத்து செய்வது கண்டனத்துக்குரியது என தெரிவித்தார். கிராம சபை கூட்டங்கள் நடந்தால், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்ற அச்சத்தில் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் முத்தரசன் குற்றஞ்சாட்டினார்.

மேலும், சசிகலா பூரண குணமடைந்து விடுதலையாக வாழ்த்துவதாகவும், முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகு சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் முத்தரசன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணி பலமாக இருப்பதாகவும், தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடப்போவதில்லை எனவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply