முக்கியச் செய்திகள் தமிழகம்

தகாத வார்த்தைகள் பேசிய திமுக பிரமுகர் – அமைச்சர் அதிரடி உத்தரவு

சென்னையில் காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசிய திமுக கவுன்சிலரின் கணவரை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த நிரஞ்சனா 51-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில், இவரின் கணவர் ஜெகதீசன், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் கவுன்சிலர் என கூறி தகாத வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதைத்தொடர்ந்து ஜெகதீசன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது, மிரட்டல் விடுப்பது, பொது இடங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியது, உள்ளிட்ட வழக்கங்களின் கீழ் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் வழக்கறிஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜெகதீசனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொற்கை அகழாய்வு; குதிரை சிற்பங்கள் கண்டுபிடிப்பு

EZHILARASAN D

Chrome Password Manager-ல் எப்படி Password இணைப்பது?

Arivazhagan Chinnasamy

கலாஷேத்ரா விவகாரத்தில் கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மன் ஜாமீன் கோரி மனு தாக்கல்; நாளை வழக்கு விசாரணை

Web Editor