இலங்கை அதிபர் இல்லம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகவும் அதிபருக்கு எதிராகவும் தொடர்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ச இல்லம் அமைந்துள்ள நுகேகொட மிரிஹானயில் திரண்ட பொதுமக்கள், அதிபருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் இல்லத்திற்கு செல்லும் சாலையை மறித்த அவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசயும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் விரட்டினர்.
அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் நுகேகொட போலீஸ் பிரிவுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.