முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

பாஜக ஆளும் மாநிலங்களுக்கே அதிக கொரோனா தடுப்பூசி: டி.ஆர் பாலு

பாஜக ஆளும் மாநிலங்களுக்கே அதிக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.

செங்கல்பட்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆலை தொடர்பாக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,“தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் செலுத்தப்பட்டுவிட்டதாகக் கூறினார். கொரோனா தடுப்பூசிகள் குறித்து மத்திய அரசிடம் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை எனக் கூறிய டி.ஆர்.பாலு, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கே அதிக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

கொரோனா மூன்றாவது அலை வரும் எனக் கூறும் மத்திய அரசு அதனை தடுக்க எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

இந்தியா ஒருபோதும் சதிசெயல்களை அனுமதிக்காது: பிரதமர் நரேந்திர மோடி!

Jayapriya

ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசி: தெலுங்கான அரசின் புதிய முயற்சி

Halley karthi

கொரோனா முடிவில் தாமதம்: உயர் நீதிமன்றம்!