முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

திணறத் திணற திரில்லர்: ‘நேட்டிவிட்டி’ கதைகளை ஓரங்கட்டும் ஓடிடி தளங்கள்!

கொரோனா, சினிமாவை கொத்திக் குதறிப் போட்ட நிலையில், கெத்தாக வளர்ந்தது நின்றது ஓடிடி தளங்கள். கொரோனாவுக்கு முன்பே ஓடிடி நிறுவனங்கள், தங்கள் தளங்களை அழுத்தமாக ஊன்றிவிட்டாலும், கொரோனாதான் அதன் வளர்ச்சிக்கு ஆஹா காரணம்!

முதல் அலையில் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்க, வழியே இன்றி ஒடிடி-க்கு வலிய வந்தார்கள் ரசிகர்கள். அந்த வாய்ப்பை இழுத்துப் பிடித்து அணைத்துக் கொண்டன ஓடிடி நிறுவனங்கள். அதற்கு முன்பு அந்த நிறுவனங்கள் வெளியிட்ட வெப் சீரிஸ்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், கொரோனாவுக்கு பிறகு வெப் சீரிஸ்களுக்கு ஏராளமாகக் கிடைத்தன தாராள வரவேற்பு.

பெயரளவில் இருந்த பல வெப்சீரிஸ்கள் கவனிக்கப்பட்டன. பதால் லோக், ஸ்கேம் 1992, ஆர்யா, ஃபேமிலிமேன், மிர்ஸாபூர் உட்பட பல இந்தி தொடர்களும் தமிழில் வெளியான ஆட்டோ சங்கர், வெள்ள ராஜா, குயின், சமீபத்தில் வெளியான நவம்பர் ஸ்டோரிஸ் ஆகிய தொடர்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. ஆனால், இந்த
தொடர்களின் கதைகள் அனைத்துமே, பயோபிக், கிரைம் டிராமா, த்ரில்லர், இன்வென்ஸ்டிகேஷன் த்ரில்லர், ஹாரார், ஆக்‌ஷன் வகையை சேர்ந்தவை.

இதைத்தவிர, நேட்டிவிட்டி, குடும்பக் கதைகள் போன்றவை வெப் சீரிஸ்களாக உருவாக்கப்படுவதில்லை. அதற்கான இடங்களை வெப் சீரிஸ்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கொடுப்பதில்லை. ஏன் இப்படி?

‘நல்ல கதைகளாக இருந்தால் அது மொழிதாண்டி ரசிக்கப்படுகிறது. எங்கோ பெயர் தெரியாத நாட்டில் அமர்ந்து கூட உங்கள் தொடர்களை ரசிக்க வேண்டும். அதாவது, உருவாக்கப்படும் ஒரு வெப்சீரிஸ், பல்வேறு மொழிகளில் டப் செய்து வெளியிடப்படுகிறது. மற்ற மொழி ரசிகர்களின் ரசனைக்கும் ஏற்ப அந்தத் தொடர் இருக்க வேண்டும்.
நேட்டிவிட்டி கதையை எடுத்தால், ஒவ்வொரு மாநிலத்துக்குமே கலாச்சாரம், பண்பாடு மாறும்போது, மற்றவர்கள்
அதை எப்படி ரசிப்பார்கள்?’ என்று கேட்கிறார், இயக்குநர் ஒருவர்.

இதுபற்றி திரைப்பட வசனகர்த்தாவும் எழுத்தாளருமான அஜயன் பாலாவிடம் கேட்டபோது, ‘வெப் சிரீஸை பொறுத்தவரை த்ரில்லர், க்ரைம், பேய் கதைகளை மட்டுமே எடுக்கிறார்கள். அதற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே போல ஃபேண்டஸி கதைகளையும் எடுக்கிறார்கள். அது அவர்கள் வியாபாரம். அதற்காக, நேட்டிவிட்டி கதைகளை ஏன் நிராகரிக்கிறார்கள் என்று கேட்கக் கூடாது. மீன் மார்க்கெட்டுக்கு வந்துவிட்டு இங்கு ஏன் பூக்களை விற்பதில்லை என்று கேட்பது போல்தான் அது’ என்கிறார்.

ஆனால், ’வெப்சீரிஸ்களாக உருவாகும் மலையாள தொடரோ, ஈரானிய, கொரிய தொடர்களோ, அந்த நேட்டி விட்டியில்தான் எடுக்கப்படுகின்றன. நாம் அதை பார்க்கும்போது, நமது நேட்டிவிட்டியை மற்ற மொழியில்
பார்க்கமாட்டார்கள் என்று முன் முடிவோடு அதைத் தவிர்ப்பது என்ன நியாயம்?’ என்கிறார்கள் வெப்சீரிஸ் ரசிகர்கள்.

நியாயம் தானே!

Advertisement:

Related posts

ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

Ezhilarasan

தோழிக்காக கொள்ளையனாக மாறிய யூடியூப் பிரபலம்!

Saravana Kumar

கொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்!

Vandhana