தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடங்கியுள்ளன.
தமிழ்நாட்டிற்கு, மத்திய அரசின் தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்தது கொள்முதல் செய்தது என இதுவரை ஒரு கோடியே 46 லட்சத்து 40 ஆயிரத்து 250 தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், ஒரு கோடியே 45 லட்சத்து 50 ஆயிரத்து 494 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள தடுப்பூசிகள் வீணானதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தற்போது தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு மத்திய தொகுப்பில் இருந்து இந்த மாதத்திற்கு 42 லட்சத்து 58ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதில் தற்போதுவரை 39 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 லட்சம் தடுப்பூசிகள் மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டியுள்ளது.
இதனால், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், கால இடைவெளி முடிந்தும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாட்டை போக்கி தடையின்றி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.