முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

மூச்சுத் திணறல்: நடிகர் திலீப் குமாருக்கு தீவிர சிகிச்சை

பிரபல இந்தி நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தி சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் திலீப் குமார். 1944 ஆம் ஆண்டு ஸ்வார் படா என்ற படம் மூலம் நடிகரான இவர், அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ள இவர், மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்ற நடிகர் இவர்தான். கடைசியாக 1998-ம் ஆண்டு வரை நடித்த அவர், உடல் நலம் காரணமாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்து வந்தார்.

இப்போது 98 வயதாகும் திலீப் குமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல் நிலை சரியாகி இரண்டு வாரங்களுக்கு முன் வீடு திரும்பினார்.

இதற்கிடையே, மூச்சுத் திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருடைய உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement:

Related posts

நாளை காய்கறி, பழங்கள் விற்பனை நேரம் என்ன?

தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்

Halley karthi

தேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷாவுக்கு முன் ஜாமீன்!

Gayathri Venkatesan