திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவார். அதன் பின்னர் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரவுள்ளார்.
234 தொகுதிகளுக்கான தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி 150 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்க உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறுகிறது. திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படவுள்ளார்.