முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021

முதல்வராக நாளை பொறுபேற்கிறார் மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க முதலமைச்சராக மூன்றாவது முறையாக நாளை மம்தா பானர்ஜி பதவியேற்கிறார்.

மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவியது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 213 தொகுதிகளை கைப்பற்றியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் அமையும் ஆட்சியில் தொடர்ந்து 3வது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். எனினும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜியை விட ஆயிரத்து 956 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக, தற்போது 77 தொகுதிகளை கைப்பற்றி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. தேர்தல் வெற்றி குறித்து பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்கம் இந்தியாவை காப்பாற்றி விட்டதாக கூறினார். இதனிடையே, மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், மேற்கு வங்க மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதி அளித்துள்ளார். இதற்கிடையே மேற்கு வங்க முதலமைச்சராக மூன்றாவது முறையாக நாளை மம்தா பானர்ஜி பதவியேற்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“மெஸ்ஸியை மீண்டும் எடுக்க வாய்ப்பில்லை” – பார்சிலோனா கால்பந்து கழக தலைவர் ஜோன் லபோர்டா விளக்கம்

Web Editor

தொப்பையை குறைப்பதற்கான வழிமுறைகள்!

G SaravanaKumar

”அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் செந்தில் பாலாஜி

Janani