மக்களவைத் தேர்தலைப் போல திமுக கூட்டணி வெற்றி பெறும் : மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் வீதிவீதியாக நடந்து சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார். சென்னையில் இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின், கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து திமுகவினர்…

கொளத்தூர் தொகுதியில் வீதிவீதியாக நடந்து சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.

சென்னையில் இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின், கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து திமுகவினர் மக்களுக்கு உதவியதாக குறிப்பிட்டார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள திட்டங்களை எடுத்துரைத்து, அவர் வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் காலூன்ற பாஜக சதி வேலைகளில் ஈடுபடுவதாக சாடிய அவர், திராவிட மண்ணில் பாஜக வெற்றி பெற முடியாது என தெரிவித்தார். மக்களவைத் தேர்தலைப் போல, திமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.