திருநெல்வேலியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர், “முருகன் மாநாட்டில் எத்தனை பேர் கலந்துகொண்டனர் என்பதை பார்த்தோம். மதுரையில் நடந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் பக்தியில்லாதவதர்கள் இவர்கள் ஒரு கூட்டத்தை நடத்தியவர்களுக்கு அவருக்கு பக்தி உள்ளதா?
நாங்கள் இறைவனின் பக்தியை நடத்தி காட்டினோம். நாங்கள் மாநாட்டில் யாருக்கும் வாக்கு கேட்கவில்லை. வாக்கு வங்கியாக அவர்கள் தான் மாற்றினார்கள். பாஜக – அதிமுக கூட்டணியை அமித்ஷா அறிவித்த உடன் இருந்தே அவர்கள் பயத்தில் எதெல்லாமோ திமுகவினர் பேசி வருகிறார்கள்.
திமுகவினருக்கு தேர்தல் பயம் தோல்வி பயம் வந்துவிட்டது. அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா நாளிதழுக்கு அளித்த பேட்டி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அது குறித்து அமித்ஷாவும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசி முடிவு செய்வார்கள் என கூறினார்.
கூட்டணி ஆட்சி அமையும் எடப்பாடி பழனிச்சாமி பெயரை சொல்லவில்லை என அமித்ஷாவின் பேட்டி குறித்து கேட்டதற்கு கூட்டணி ஆட்சி அமையும் எடப்பாடி பழனிச்சாமி பெயரையும் ஏற்கனவே அமித்ஷா சொல்லி விட்டார், தமிழக வெற்றி கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு நல்லதே நடக்கும்” தெரிவித்துள்ளார்.







