இந்தியாவிலேயே கால்பந்து ரசிகர்களை அதிகம் கொண்ட மாநிலமாக கேரளா உள்ளது. 2026 ஃபிஃபா உலககோப்பை கால்பந்து தொடரை கேரள கால்பந்து ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படும் அர்ஜண்டினா வீரர் மெஸ்ஸி கடந்த 24-ஆம் தேதி தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் மெஸ்ஸியின் தீவிர ரசிகரான கேரளா-வை சேர்ந்த யாதில் என்பவர் மெஸ்ஸி-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் யாதில், மெஸ்ஸியின் புகைப்படம் வரையப்பட்டுள்ள மாபெரும் சுவர் முன் நின்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலானது.
இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த கால்பந்து வீரர் மெஸ்ஸி அதனை லைக் செய்ததுடன் “Gracias Yadil” என்றும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மெஸ்ஸியின் இந்த செயல் கேரள ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




