“வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்” – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா, வெனிசுலா நாட்டுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிபித்துள்ளார்.

வெனிசுலாவுடன் தனது நிர்வாகம் ஒரு விரிவான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அது நிறைவேறினால், அந்த தென் அமெரிக்க நாட்டின் பயன்படுத்தப்படாத பெருமளவிலான எண்ணெய் வளங்களை அமெரிக்கா குறைந்த செலவில் அணுக முடியும் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக அவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவட்து, “அமெரிக்கா தற்போது வெனிசுலா நாட்டுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது!. எனது உத்தரவின் பேரில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோர், வெனிசுலாவின் மிகவும் மதிக்கப்படும் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் மற்றும் தனியார் வணிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டனர்.

இதன் மூலம், அமெரிக்க வரி செலுத்துவோருக்கு எவ்விதச் செலவும் இன்றி, வெனிசுலாவில் உள்ள 65 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட எண்ணெய் இருப்பின் மீது அமெரிக்கா பெரும்பான்மையான கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அமெரிக்காவின் எண்ணெய் இருப்பை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்துகிறது; நமது எண்ணெய் விநியோகத்தை வெகுவாக அதிகரிக்கிறது;

மேலும் அனைத்து அமெரிக்கர்களுக்கும் நீண்ட காலத்திற்கு எரிபொருள் விலையைக் கணிசமாகக் குறைக்கிறது. அதே வேளையில், வெனிசுலாவை மிகப்பெரிய வெற்றி மற்றும் செழிப்பை நோக்கிய பாதையில் தொடர்ந்து பயணிக்கவும் இது உதவுகிறது. இந்த ஒப்பந்தம் வெனிசுலா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்கனவே வளர்ந்து வரும் உறவை மேலும் வலுப்படுத்தும்! இந்த முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியமைக்கு நன்றி. அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம்! அதிபர் டொனால்ட் டிரம்ப்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.