நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி பனிப்பாறைச் சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள், வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்தன. இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 500-ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல, 1,468 பேர் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய கும்பகோணத்தில் இருந்து கைலாஷ் யாத்திரைக்குச் சென்ற 57 பேரில் இதுவரை 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில், முதலமைச்சர் விஜயின் உத்தரவின்பேரில் நேபாளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுணா, ராஜ்மோகன், வினோத் உள்ளிட்டோர் அடங்கிய குழு டெல்லி சென்று, தமிழ்நாடு இல்லத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டது.
இதனைத் தொடர்ந்து, நேபாளில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் நேற்று நள்ளிரவில் சென்னை வந்தடைந்தனர். அவர்களுக்கு அவர்களது உறவினர்கள் வரவேற்பு அளித்தனர்.




