டெல்லியில் நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றார். மதியம் | மணி அளவில் தமிழக அரசு இல்லம் வந்த முதலமைச்சர் விஜயை தலைமைச் செயலாளர் சாய்குமார் ஆகியோர் வரவேற்றனர். மாலையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்தார். இதன் பிறகு அவர் இரவு 7.30 மணி அளவில் தமிழ்நாடு அரசு இல்லத்துக்கு திரும்பினார்.
இதற்கிடையில் இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறபட்டார். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நிதி ஆயோக் கூட்டத்துக்கு புறப்பட்ட சற்று நேரத்திலேயே முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் தமிழ்நாடு அரசு இல்ல உணவகப் பகுதியில் தீயினால் புகை எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.




