திமுக சொல்வதை அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் நட்டாத்தி பகுதியில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். மக்களின் குறைகளைக் கேட்டறிந்த அவர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். கோயில்கள், கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என குறிப்பிட்ட ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை உறுப்பினராக கனிமொழி தேர்வாகி, 2 ஆண்டுகளில் தொகுதிக்கு செய்த திட்டப்பணிகளை பட்டியலிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் கோரிக்கைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காண தனித் துறை அமைக்கப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். தேர்தல் சுயநலத்திற்காக அதிமுக அரசு விவசாயக் கடன்களை ரத்து செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் ரத்து என்ற அறிவிப்பைத் தொடர்ந்தே, தற்போது பயிர்க்கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும், திமுக சொல்வதை அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி வருவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.