முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

திமுக என்றாலே மன்னர் ஆட்சிதான்: அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

அதிமுக என்றால் மக்கள் ஆட்சி என்றும் திமுக என்றால் மன்னர் ஆட்சி என்று சென்னை சேப்பாக்கத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி ஆதரித்து பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரையில் ஈடுபட்டு பேசியதாவது, “இந்த தொகுதியின் மருமகன் நான் என்று சொல்லிக்கொள்ளலாம். என் மனைவி இங்கேதான் பிறந்தார்கள், வளர்ந்தார்கள், படித்தார்கள். அவளது வீடு இங்குதான் இருக்கிறது. நமது வேட்பாளர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி ஆதரவளிக்க வேண்டும். உதயநிதிக்கும் இந்த தொகுதிக்கும் சமந்தமே இல்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உதயநிதியின் தாத்தா இத்தொகுதியில் நின்றதால் உதயநிதியும் இத்தொகுதியில் நிற்பேன் என்கிறார். திமுக ஒரு கட்சி கிடையாது அது ஒரு குடும்பம். திமுகவிற்காக உழைத்தவர்கள் அந்த கட்சியில் அதிகம் பேர் உள்ளனர். ஆனால் அவர்களை திமுக ஓரம்கட்டிவிட்டது. ஸ்டாலின் குடும்பத்தினர் மட்டுமே திமுகவின் முக்கிய அங்கமாக இருக்க முடியும். அதிமுக என்றால் மக்கள் ஆட்சி. திமுக என்றால் மன்னர் ஆட்சி. ஏன் என்றால் இங்கே ஒரு விவசாயி முதல்வராக வரலாம். இனியொரு விவசாயி துணை முதல்வராக வரலாம். ஆனால் திமுகவில் மன்னர் ஆட்சி இருப்பதால் வாரிசு அரசியல்தான் சாத்தியம்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு தாய்,சேய் மருத்துமனை அமைத்துதருவேன்: என்.ஆர். தனபாலன்!

சென்னையில் வரும் 21ஆம் தேதி நம்ம ஊரு திருவிழா: அமைச்சர் தங்கம் தென்னரசு

Arivazhagan Chinnasamy

இலங்கை: பசில் ராஜபக்சேவை விமர்சித்த, 2 அமைச்சர்கள் பதவி நீக்கம்

Halley Karthik