இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்தநாள் விழா இரண்டாம் ஆண்டாக இந்த வருடமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் 95வது பிறந்தநாள் வரும் எப்ரல் மாதம் வருகிறது. அரச குடும்பத்தின் வழக்கப்படி அவர்கள் தங்களது பிறந்தநாளை இரண்டு முறை கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது எடுத்துக்காட்டாக அவர் அக்டோபர் மாதத்தில் பிறந்தாலும் பிறந்தநாளை கோடைகால விடுமுறையில் இணைத்து கொண்டாடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். 1748ம் ஆண்டில் இரண்டாம் ஜார்ஜ் மன்னர் அக்டோபரில் பிறந்திருந்தாலும், வருடாந்திர கோடைகால இராணுவ அணிவகுப்பை தனது பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் இணைத்து கொண்டாடினார். அப்போதிருந்து, ஆட்சி செய்யும் மன்னருக்கு கோடைகாலத்தில் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இங்கிலாந்து ராணியின் பிறந்தநாள் வரும் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டமானது 1400 படைவீர்ரகள், 200 குதிரை அணிவகுப்புடன் மிக சிறப்பாக லண்டனில் கொண்டாடப்படும். ஆனால், கடந்தாண்டு கொரோனா பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ராணியின் பிறந்தநாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







