முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

ஆரணி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – முதல்வர் பழனிசாமி!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்ற பெற்றால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருவண்ணாமாலை மாவட்டம் போளூரில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கல்வித்துறை வளர்ச்சிக்கு அதிமுக ஆட்சியில் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக கூறினார். ஆண்டுக்கு 5 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், இதுவரை 52 லட்சத்து 31 ஆயிரம் மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால்தான், உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழகம் விஞ்ஞான உலகமாக இருக்கும் எனவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

முன்னதாக ஆரணியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியில் இல்லாதபோதும் திமுகவினர் அதிகாரிகளை மிரட்டுவதாக குற்றம்சாட்டினார். மீண்டும் அதிமுக அரசு அமைந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் எனவும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ஆறு எரிவாயு கியாஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

ஒரு லட்சம் ரூபாய் வரையிலான, நெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்த முதலமைச்சர், ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இ-சேவை 2.0 திட்டம் : மனோ தங்கராஜ்

EZHILARASAN D

பயணிக்கு நெஞ்சுவலி: ஓட்டுநர் எடுத்த முடிவுக்கு குவியும் பாராட்டு!

எல்.ரேணுகாதேவி

சென்னையில் பிளாஸ்டிக் குப்பை எரியூட்டும் நடமாடும் ஆலையா? அன்புமணி

EZHILARASAN D