முக்கியச் செய்திகள் தமிழகம்

”திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது” – அண்ணாமலை

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்றும், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை திமுக பயத்தோடு அணுகுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

நெல்லையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனை அவரின் இல்லத்தில் சந்தித்தார். அப்போது, மாற்று கட்சியில் உள்ளவர்கள் அண்ணாமலை முன்னிலையில், பாஜகவில் இணைந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சேது சமுத்திர திட்டத்தை, திமுக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தீர்மானம் மட்டும் கொண்டு வந்தது. அதுவும் காணாமல் போய்விட்டது. பெயருக்காக திமுக எதையாவது அறிவித்துவிட்டு அதை கிடப்பில் போட்டு விடும். தமிழ்நாடு சர்ச்சை ஏற்படுத்தி இப்பொழுது அதற்கு அமைதியாக இருக்கிறார்கள்.

நெல்லையில் வேலைவாய்ப்பு பெரிய பிரச்சனையாக உள்ளது. மத்திய அரசு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கும் என தெரிவித்திருந்தது. பிரதமர் அந்தமானைச் சுற்றி இருக்கும் தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா வீரர்களின் பெயரை சூட்டியுள்ளார். இதை தமிழக முதல்வர் பாராட்ட வேண்டும்.

ஆட்சிக்கு வந்து 20 மாதம் கூட ஆகவில்லை. திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இந்த தேர்தல் விசித்திரமான தேர்தலாக மாறி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை திமுக பயத்தோடு அணுகுகிறது. அங்குள்ள திமுக மாவட்ட செயலாளரே அதிருப்தியில் தான் உள்ளார்.

ஈரோடு தேர்தல் களத்தில், முதலில் இருப்பவர்கள் தான் ஜெயிப்பார்கள் என்பதில்லை. மக்கள் மன்றத்தில், திமுக மீது கோபம் ஏற்பட்டுள்ளது. திமுக நடவடிக்கைகள் அவர்களது பயத்தை தான் காட்டுகிறது. இடைத்தேர்தலில் 80% ஆளும் கட்சி தான் ஜெயிப்பார்கள். இடைதேர்தலை பொறுத்தவரை பணத்தை கொட்டி ஆளும் கட்சியினர் வெல்வார்கள்.

ஈரோடு தேர்தல் போட்டியிட்டு பாஜக தங்களை நிரூபிக்க வேண்டுய அவசியம் இல்லை. பாஜக கூட்டணியில் ஸ்ட்ராங்கான கட்சி அதிமுக. தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு இருக்கக்கூடாது. திமுகவின் வேட்பாளர் தோற்கடிக்கப்பட வேண்டும். 2024 தேர்தல் தான் பாஜக பலப்பரீட்சைக்கான தேர்தல்.

திமுக தேர்தல் அறிக்கைபடி, 5 ஆண்டுகளில் 3 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும். குருப் 4 தேர்வு முடிவுகளைக்கூட இன்னும் வெளியிட திமுகவால் முடியவில்லை. திருநெல்வேலியில் பாஜக பலமாக உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ல் இயங்கத் தொடங்கும்.

என்ன தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும் தமிழக அமைச்சர்கள் 20 மாதங்களாக சம்பாதித்த பணமெல்லாம் இடைத்தேர்தலில் வெளிவரத்தான் போகிறது. மருத்துவத் துறையில் முதல் மாநிலமாக செயல்படுவதாக தமிழக முதல்வர் தெரிவித்து வரும் நிலையில், எய்ம்ஸ் வந்தால் தான் மருத்துவம் சிறப்பாக இருக்கும் என தெரிவிப்பதெல்லாம் வேடிக்கையாக உள்ளது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘அக்னிபாத்’ போராட்டம்: பீகாரில் ரயில் சேவை ரத்து?

Halley Karthik

பொங்கல் ரேஸில் இருந்து வெளியேறும் அஜித், போட்டியின்றி வெளியாகும் விஜய்யின் வாரிசு

Web Editor

டெபாசிட் தொகையை திருப்பித் தராமல் மோசடி-நிதி நிறுவன இயக்குநர் கைது

Web Editor