’அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கி வைத்துள்ளது’ – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட  ராஜகோபல் தோட்டம் பகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக…

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட  ராஜகோபல் தோட்டம் பகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை ஈரோட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். அதிமுக கொண்டு வந்த திட்டங்களையெல்லாம் திமுக முடக்கி வைத்துள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஈரோட்டில் அதிமுக ஆட்சியில்  மேம்பாலங்கள் கட்டப்பட்டது. அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் எந்த திட்டங்களும் செய்யவில்லை என மு.க.ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார். 21 மாத ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து வாக்கு சேகரிக்கிறார்கள். இந்த இடைத்தேர்தல் மூலம் திமுகவுக்கு, மக்களாகிய நீங்கள் ஒரு பாடம் புகட்ட வேண்டும். மக்களைக் கொட்டைகைக்குள் அடைத்து வைத்துள்ளார்கள்.

அண்மைச் செய்தி: வகுப்பறைக்கு வராத மாணவர்கள், மின்னஞ்சல் அனுப்பிய பேராசிரியர் – பிறகு நடந்த சுவாரஸ்யம்!

விதிமுறைகளை மீறியது தொடர்பாக தேர்தல் ஆனையத்தில் புகார் கொடுத்தும் எந்த பயனுமில்லை. எங்காவது வாக்காளர்களை அடைத்து வைத்தால், அந்த பகுதிக்கே  நானே வேட்பாளரை அழைத்துச் சென்று பிரச்சாரம் செய்வேன். எழுதாத பேனாவைக் கடலில் வைக்கிறார்கள். அவர் தந்தைக்கு பேனா வைத்தால்தான் பெயர் கிடைக்குமா?. அது மக்களின் வரிப்பணம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.