விமான நிலையத்தில் அதிக விலைக்கு உணவு விற்கப்படுவதை சுட்டிக்காட்டி, தனது அம்மா சமைத்த ஆலு பரோட்டாவை ஏர்போர்ட்டில் சாப்பிட்ட இளைஞரின் வீடியோ வைரலாகி உள்ளது.
விமான நிலையங்களில் உணவுப் பொருட்களுக்கு அதிக விலை வசூலிக்கும் விற்பனை நிலையங்கள் பற்றி அடிக்கடி விமானத்தில் பயணிப்பவர்களுக்கு கண்டிப்பாகத் தெரியும். இதன் காரணமாக சிலர் வீட்டில் சமைத்த உணவுகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்வார்கள். சிலர் அதிகமாக செலவழிப்பதைத் தவிர்ப்பதற்காக ஏற்கெனவே சாப்பிட்டுவிட்டு வருபவர்களும் உண்டு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், விமான நிலையத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்து ட்விட்டரில் குற்றம்சாட்டியுள்ளார் இளைஞர் ஒருவர். மேலும், கோவாவுக்குப் பயணம் செய்த அவர் தனது அம்மா வீட்டில் சமைத்து தந்த ஆலு பரோட்டாவை ஏர்போர்ட்டில் சாப்பிடும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இளைஞரின் இந்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.
இதுகுறித்து, மாதுர் சிங் தனது ட்விட்டர் பதிவில், “விமானங்களில் பயணம் செய்வது என்பது நடுத்தர வர்க்கத்திற்கு எளிதாகிவிட்டது. ஆனாலும், விமான நிலையத்தில் விற்கப்படும் ரூ. 400 மதிப்புள்ள தோசை மற்றும் ரூ.100 மதிப்புள்ள தண்ணீர் பாட்டிலை வாங்குவதற்கான சமூக அழுத்தம் என்பது இன்னும் அதிகமாகவே உள்ளது. எங்களது கோவா பயணத்திற்காக எனது அம்மா ஆலு பரோட்டாவை பேக் செய்தார். நாங்கள் அதை நிம்பு கா அச்சார் உடன் விமான நிலையத்தில் சாப்பிட்டோம், ”என்று மாதுர் சிங் ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
Some people looked at us, oddly, but hey, they don’t matter and we don’t care.
Jitni pocket allow kare utna kharcho. Jo taste pasand ho wo khaao. Society to pata nahi kya kya sochti hai. Sochne do. Tum mast apni life apne style se jiyo.
— Madhur Singh (@ThePlacardGuy) February 13, 2023
மற்றொரு பதிவில், “விமான நிலையத்தில் நம்முடைய உணவை சாப்பிடுவதை இயல்பாக்குங்கள். அங்கு சிலர் எங்களை வித்தியாசமாகப் பார்த்தார்கள், ஆனால், எங்களுக்கு அவர்கள் ஒரு பொருட்டல்ல, நாங்கள் அவர்களைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. உங்கள் பாக்கெட் அனுமதிக்கும் அளவுக்கு செலவு செய்யுங்கள். நீங்கள் விரும்பும் உணவை உண்ணுங்கள். சமூகம் நிறைய நினைக்கும். அவர்கள் சிந்தித்துக்கொண்டே போகட்டும். உங்கள் பாணியில் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
பிப்ரவரி 13 அன்று பகிரப்பட்ட இந்த ட்விட்டர் பதிவை 8.9 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த ட்விட்டர் பதிவுக்கு பலரும் தங்களது கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ பதிவுக்கு எம்பி மஹூவா மொய்த்ராவும், குட் ஜாப். நான் எப்போதுமே விமானத்தில் செல்லும்போது எனக்கான உணவை எடுத்துச் செல்வேன். பரோட்டா பார்ப்பதற்கே யம்மியாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்..
-ம.பவித்ரா