தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை-எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினார். சேலத்தில் 50அடி உயர அதிமுக கொடி கம்பத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி…

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினார்.

சேலத்தில் 50அடி உயர அதிமுக கொடி கம்பத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

திமுக ஓராண்டு கால ஆட்சியில் நாட்டு மக்களுக்கும் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், செயின் பறிப்பு இதுதான் நடைபெற்று வருகிறது.

ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படாத அரசு. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 5 சவரன் நகை தள்ளுபடி செய்யப்படவில்லை. மக்களை ஏமாற்றியது தான் மிச்சம். 13 லட்சம் பேருக்கு மட்டும்தான் கடன் தள்ளுபடி. கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கியது 48 லட்சம் பேர். 35 லட்சம் மக்களை ஏமாற்றியுள்ளார்.

2 கோடியே 15 லட்சம் குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தருவதாக தெரிவித்தனர். ஓட்டை மாற்றி போட்டதால் உரிமைத் தொகை இல்லை.
முதியோர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரையும் ஏமாற்றும் அரசு திமுக அரசு. திமுக பேசுவது எல்லாம் பச்சை பொய். அதிமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கல்வி வழங்கும் திட்டத்தை வேண்டுமென்றே திமுக அரசு நிறுத்தி வைத்தது.

மாணவர்களுக்கு மடிக்கணினி இதுவரை கொடுக்கப்படவில்லை. இனிமேல் கொடுப்பார்கள் என தெரியவில்லை. அடித்தட்டு ஏழை மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் நிறுத்தி வைத்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் படிக்கும் மருத்துவ கனவை நிறைவேற்றும் வகையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு காரணமாக 550 மாணவர்கள் பயனடைந்தனர்.

ஏழை மக்களின் பாசம் கொண்ட அரசு அதிமுக அரசு. 2016- 17 ஆம் ஆண்டு வெறும் 9 பேர் தான் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு சென்றனர்.
ஆன்லைன் ரம்மியால் தொடர் உயிரிழப்பு நடைபெறுகிறது. இதை அரசாங்கம் தடுத்து நிறுத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.