முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜூன் 14இல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்ட ஆலோசனை

ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஜூன் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி போஸ் மண்டபத்தில் ஜூன் 23ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. செயற்குழு மற்றும் பொதுக்குழு நடத்துவது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் ஜூன் 14ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர்  எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகளும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’மரண பயத்தை காட்டிட்டான் பரமா’: ’சுப்ரமணியபுரம்’வந்து 13 வருஷமாச்சு!

EZHILARASAN D

மதசார்பற்ற சக்திகளை ஒன்றிணைப்பதில் முக்கிய நிகழ்வு: பீகார் ஆட்சி மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

Web Editor

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி!

Web Editor