திமுக நிர்வாகி மீது கொடூர தாக்குதல்- விழுப்புரத்தில் பயங்கரம்

திமுக பொதுக்குழு உறுப்பினரான ஜெயக்குமாரை மூன்று பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானுர் அடுத்த கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர்…

திமுக பொதுக்குழு உறுப்பினரான ஜெயக்குமாரை மூன்று பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானுர் அடுத்த கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்.இவர் திமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக செயல்பட்டுவருகிறார். இவரது தாய் முன்னால் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார்.நேற்று இரவு தனது சொந்த வேலை காரணமாக கோட்டக்கரையில் இருந்து திருசிற்றம்பலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ஜெயக்குமாரை வழிமறித்தனர்.சுதாரித்து கொண்ட ஜெயக்குமார் அங்கு இருந்து தப்ப முயன்றார்.அப்போது அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி தப்பி சென்றனர்.

காயமடைந்த ஜெயக்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திமுக உறுப்பினர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.