ஏன் இந்த பாரபட்சம் நீதிமன்றமே? என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் சாதாரண ஏழை நடுத்தர மக்கள் தங்கள் சிறுசேமிப்பிலிருந்து சொந்தமாகக் கட்டிய ஆயிரக்கணக்கான வீடுகளை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் எனவும், அதை அமல்படுத்த மறுக்கிற அதிகாரிகளைச் சிறைக்கு அனுப்புவேன் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து கடுமை காட்டுகிறது எனத் தெரிவித்துள்ள அவர், ஏழை எளிய மக்களின் வீடுகளை இடிப்பதால் கண்ணீரும் கம்பலையுமாக அலைகிற காட்சிகள் மனிதநேயம் உள்ள அனைவரையும் உலுக்கி எடுக்கின்றன எனக் கூறியுள்ளார்.
மேலும், நீதிமன்றம் அந்த அழுகுரல்களைக் கேட்கவோ அல்லது அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என உத்தரவிடவோ கூட மறுக்கிறது எனத் தெரிவித்துள்ள அவர், இவ்வளவு கடுமையாக நடந்துகொள்ளும் நீதிமன்றம் தஞ்சாவூரில் உள்ள சாஸ்தா பல்கலைக்கழக வழக்கில் செய்வது என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘‘வாழை இலை சாப்பாடு நல்ல ருசியாக இருந்தது’ – செஸ் வீரர் ட்வீட்’
அரசுக்குச் சொந்தமான 31 ஏக்க நிலங்களை ஆக்கிரமித்து கல்லூரி கட்டிடங்களைக் கட்டியுள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம், கடந்த 30 ஆண்டுகளாகக் கொள்ளை இலாபம் சம்பாதித்து வருகிறது. அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்துள்ளது எனத் தெரிவித்துள்ள அவர்,
https://twitter.com/kbcpim/status/1557216260856786945
உயர்நீதிமன்றம், அரசின் உத்தரவை அமலாக்கச் சொல்லியிருக்க வேண்டும், மாறாக சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அரசு தரப்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கும் வரை வழக்கு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவிட்டுள்ளது. சாதாரண ஏழை எளிய மக்களிடம் கடுமையும், சாஸ்திரா பல்கலைக்கழகத்திடம் மென்மையும் கடைப்பிடிக்கும் இந்த பாரபட்சம் ஏனோ? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.







