பெருந்துறையில் மதுபோதையில் முதியவரை தாக்கிய திமுக நிர்வாகி நண்பருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அண்ணா சிலை அருகே கடந்த 18ம் தேதி பெருந்துறை பேரூர் திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் சந்தோஷ் ரகுமான் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு பின்னர் வீடு திரும்பி கொண்டு இருந்தபோது முருகேசன் என்பவரை தாக்கிவிட்டு நண்பர்களுடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட முருகேசன் பெருந்துறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தலைமறைவான சந்தோஷ் ரகுமான் மற்றும் அவரது நண்பர்களான வினோத், ஜிப்சன் ஆகிய மூவரை தேடி வந்தனர். இந்நிலையில் திமுக இளைஞரணியை சேர்ந்த சந்தோஷ் ரகுமான் மற்றும் வினோத் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஜிப்சனை போலீசார் பெருந்துறையில் தேடி வருகின்றனர்.
-ரூபி







