திமுக சார்பில் ரூ.1 கோடி கொரோனா நிதி!

கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, செலவளிக்க பெருநிறுவனங்கள், சமூகநல அமைப்புகள்…

கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, செலவளிக்க பெருநிறுவனங்கள், சமூகநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை ஏற்று பல்வேறு அமைப்புகள், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, பணம் வழங்கி வருகின்றன. இந்நிலையில், திமுக அறக்கட்டளை சார்பில், கொரோனா நிவாரண நிதியாக, ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக அறக்கட்டளை தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.