நாடாளுமன்றத்தில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு

பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு விவகாரம் குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் மக்களவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…

பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு விவகாரம் குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் மக்களவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பின்னர், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைக்கப்படாதது குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் சபாநாயகரை வலியுறுத்தினார். ஆனால் டி.ஆர்.பாலு தொடர்ந்து பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து சபாநாயகரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினரான திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், இன்றைய மக்களவை கூட்டத்தை புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.