புயலால் சேதம் அடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை நாளை மீண்டும்
செயல்பாட்டுக்கு வருகிறது.
மாண்டாஸ் புயலால் கடல் அலையின் சீற்றத்தால் சென்னை மெரினா கடற்கரையில்
மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட நடைபாதையில் கடலுக்கு
அருகில் உள்ள முன் பாதை உடைந்து சேதம் அடைந்தது.

சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில்
முற்றிலும் மரப்பலகைகளால் இந்த மரப்பாதையானது அமைக்கப்பட்டு கடந்த மாதம் 27ஆம் தேதி பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. கடலின் அருகே மாற்று திறனாளிகள் கடல் அலையை ரசிக்க அமைக்கபட்டு இருந்த பாதையின் ஒரு பகுதி அலைகளால் சேதம் அடைந்தது.
மேலும் அந்தப் பாதை முழுவதும் கடற்பரப்பில் இருந்த மணல் சூழ்ந்தது. இதனை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள் புயலுக்கு பிறகு இது சரி செய்யப்படும் என தெரிவித்து இருந்தனர். தொடர்ந்து இன்று மாநகராட்சி ஊழியர்கள் அந்தப் பாதையில் சூழ்ந்திருந்த மணலை சுத்தம் செய்தனர்.
மேலும் சேதம் அடைந்த பகுதியை விடுத்து அதற்கு முன்பு வரை மட்டும் மாற்றுத்திறனாளிகள் வந்து கடலை ரசிப்பதற்காக அனுமதி அளித்துள்ளது. இந்த நடைபாதை நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.







