நிலக்கோட்டை தொகுதியில், மக்கள் விடுதலை கட்சி வேட்பாளர் முருகவேல் ராஜன், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும், என கூறி வாக்குசேகரித்தார்.
நிலக்கோட்டை தொகுதியில், திமுக கூட்டணியில் மக்கள் விடுதலைக் கட்சி சார்பில் போட்டியிடும் முருகவேல் ராஜன், தொகுதி மக்களிடையே திமுகவின் தேர்தல் அறிக்கையை பற்றி கூறி, வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். மேலும், சக்கையநாயக்கனூரில் பொதுமக்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி அமைத்தவுடன், 6 சதவீத இடஒதுக்கீடு அதிகரிக்கும், என திமுக தலைவர் ஸ்டாலின், வாக்குறுதி அளித்திருப்பதாக கூறி வாக்கு சேகரித்தார்.
மேலும், தொகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும், முக்கியமாக குடிநீர் தேவை முற்றிலும் தீர்க்கப்படும், என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.
Advertisement: