முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திமுகவை வீழ்த்த தேமுதிகவும் அதிமுகவும் ஒன்றுபடுவது மிக அவசியம் – சி.டி.ரவி

ஈரோடு இடைத்தேர்தலில், திமுகவை வீழ்த்த  தே.மு.தி.க.வும் அ.தி.மு.க.வும் ஒன்றுபடுவது மிக அவசியம் என பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். 

பாஜக தேசியப் பொதுச் செயலாளர்  சி.டி.ரவி, எம்.எல்.ஏ   வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

”1972-ல் அ.தி.மு.க உருவானபோது டாக்டர் எம்.ஜி.ஆர் தி.மு.க.வை ‘தீய சக்தி’ என்று அழைத்தார். அந்த நிலையிலிருந்து, தற்போது 2023-வரை திமுக இன்னும் மாறவில்லை.  ஜெயலலிதாவும், தான் உயிருடன் இருக்கும் வரை, திமுகவை “தீய சக்தி” என்றுதான் அழைத்தார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்குப் பெறாத நிலையில், ஈரோடு கிழக்கில் இந்த இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. மேலும், திமுக என்ற கட்சி, ஒரு தனிப்பட்ட குடும்ப லாபத்திற்காகவும், அதே நேரத்தில் தமிழ் மக்களுக்கு எதிராகவும், தொடர்ந்து செயல்படுகிறது.

இதனால் மக்களிடையே தி.மு.க., ஆட்சிக்கு எதிராக பெரும் எதிர்ப்பு மனநிலை உள்ளது.
மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, போதைப் பொருட்கள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் என்ற மக்கள் விரோதப் போக்குகள் ஒருபுறம், அது மட்டுமின்றி, தமிழ் கலாச்சாரத்தின் மீது திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் வெறுப்புணர்வும் தாக்குதல்களும் மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

கடைமட்ட கட்ட பஞ்சாயத்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அதிகரிப்பும், அதைக் கட்டுப்படுத்த வழியில்லாத திமுகவுக்கு எதிராக, தமிழ் மக்கள் இருப்பதை நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.

திமுக பணபலம் மற்றும் அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துவதால், இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் எப்படி நடக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்போதே ஈரோட்டில் நடப்பதையெல்லாம் பார்த்து வருகிறோம். அதனால் தான் இந்த இடைத்தேர்தலில், திமுகவை தோற்கடிக்க தேமுதிகவும் அதிமுகவும் ஒன்றுபடுவது மிக அவசியம்.

இன்று காலை தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம், ஆகியோரை ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் தமிழகம் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.

இது ஒரு நல்ல முன்னேற்றம். எங்களது  தேசிய தலைவர் ஜே.பி.நட்டா  சார்பாக சில விஷயங்களை தெரிவித்தேன். அதையெல்லாம் உங்களிடம் தனித்தனியாக, என்ன பேசினோம் என்பதை, இப்போது நான் வெளியிட இயலாது. இந்த இடைத்தேர்தலில் தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற மக்கள் விருப்பத்தை இருவரிடமும் வலியுறுத்தியுள்ளோம்.” என சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உப்பள தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல்காந்தி!

Niruban Chakkaaravarthi

பழனியை தனிமாவட்டமாக உருவாக்க கோரிக்கை!

Niruban Chakkaaravarthi

சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனு தாக்கல்!

G SaravanaKumar