கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்பம் சுற்றி துவக்கிவைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மறைந்த முதல்வர் அண்ணாவின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதை ஒட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள விளையாட்டு மையங்களிலும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் இந்த போட்டிகளை துவக்கி வைப்பதற்காக தமிழக தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அண்ணா விளையாட்டரங்குக்கு வந்தார். அப்போது, போட்டிகளைத் துவக்கி வைக்கும் முன்னர் அவர் ஏற்கனவே சிலம்ப கலையில் ஈடுபாடு உள்ளவர் என்பதால், சிலம்பம் சுற்றி பார்வையாளர்களை அசத்தினார்.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் லெமூரியா வர்மகளரி அடிமுறை உலக கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற நிகழ்வில்… pic.twitter.com/KtOfAQMBim
— Mano Thangaraj (@Manothangaraj) February 27, 2022
இதைத்தொடர்ந்து, அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், சுற்றுச்சூழல் மற்றும் உணவு பழக்கங்கள் மாறிவிட்ட நிலையில் மனிதன் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரும் நிலை உள்ளதால் அனைவரும் விளையாட்டுகளில் கவனம் செலுத்தி உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதையடுத்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் மாநகராட்சி ஆணையர் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
-ம.பவித்ரா