முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் பிரச்சாரம்!

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை, முதல்முறையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார்.

திருவள்லூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில், தேமுதிக வேட்பாளர் கே.எம்.டில்லியை ஆதரித்தும், அமமுக பொன்னேரி தொகுதி வேட்பாளர் பொன்.ராஜாவை ஆதரித்தும், வேனில் நின்றபடியே கையை அசைத்தபடி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்கு சேகரித்தார்.

அப்போது, அவருக்கு கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல், நீண்ட நாட்களுக்கு பிறகு, பொதுமக்களை சந்தித்து விஜயகாந்த் வாக்கு சேகரித்தது, தேமுதிக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

Advertisement:
SHARE

Related posts

கீழடி; தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தீவிரம்

Halley karthi

ஒரு கர்ப்பிணி மருத்துவரின் கொரோனா மரணம்: யார் இந்த மருத்துவர் சண்முகப்பிரியா!

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கணக்கு விவரங்கள்: விரைவில் 3 வது பட்டியல்

Ezhilarasan