உதயநிதி ஸ்டாலின் தம்மை பற்றி விமர்சிப்பதையெல்லாம் தான் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இடைத்தரகர்கள் முற்றிலுமாக அகற்றப்படுவதற்காக தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் கணினி வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், திமுக குறித்து கமல்ஹாசன் விமர்சித்ததை பெரிய பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை என உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினை பெரிய பொருட்டாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று கூறினார். அதிமுக தேர்தல் அறிக்கையை மக்களில் ஒருவனாக நின்று பார்த்தே தாம் விமர்சனம் செய்வதாக கமல்ஹாசன் கூறினார்.







