முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

ஸ்டாலினின் மூலதனமே பொய்தான்: முதல்வர்!

அரசியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மூலதனமே பொய்தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், உண்மைக்கும் வெகுதூரம் என சாடினார். அவரது அரசியல் மூலதனமே பொய் தான், எனவும் முதலமைச்சர் காட்டமாக கூறினார்.

மேலும், திமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பிரச்னைகளை தீர்க்க என்ன செய்தார்? என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இந்த தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற தேர்தலாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணிக் காக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

Saravana Kumar

மருத்துவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர்!

Vandhana

அரசியலிலிருந்தே ஒதுங்குகிறேன்: சசிகலா

Niruban Chakkaaravarthi