தீபாவளி பண்டிகை: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் அளவில் மலர்கள் ஏற்றுமதி,  இறக்குமதி…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் அளவில் மலர்கள் ஏற்றுமதி,  இறக்குமதி விற்பனைக்கு புகழ் பெற்றது.

இங்கு மதுரை,  திண்டுக்கல் என பிற மாவட்டங்களில் இருந்தும் குமாரபுரம்,  ஆரல்வாய்மொழி என உள்ளூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும்
தினந்தோறும் பல டன் பூக்கள் வரத்து இருக்கும். அதைப்போல் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி நடைப்பெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்:வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகை காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை மிகவும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இன்று,  தீபாவளி ஒட்டி பிச்சிப்பூ ரூ.1250-க்கும், மல்லிகை ரூ.1500-க்கும், அதேபோல் கிரேந்தி 40 ரூபாய்க்கும், செவ்வந்தி 170 ரூபாய்க்கும், அரளி 80 ரூபாய்க்கும், சம்பங்கி 30 ரூபாய்க்கும், வாடாமல்லி 50 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1000 ரூபாய்க்கும்,
ரோஜா 80 ரூபாய்க்கும்,  மரிக்கொழுந்து 100 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை 40ரூபாய்க்கும்,  தாமரைப்பூ ஒன்று 15 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.