மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கழிப்பறை கட்டி கொடுத்த #TVK மாவட்ட பொறுப்பாளர்!

புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் முன் வைத்த கோரிக்கையை தமிழக வெற்றி கழக மாவட்ட பொறுப்பாளர் நிறைவேற்றினார். புதுக்கோட்டை வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பெண்புவனேஸ்வரி(42). இவரின் கணவர் சுரேஷ் குமார் 5…

District in-charge of Tamil Nadu Vetri Kazhagam fulfilled the request of differently abled woman in Pudukottai.

புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் முன் வைத்த கோரிக்கையை தமிழக வெற்றி கழக மாவட்ட பொறுப்பாளர் நிறைவேற்றினார்.

புதுக்கோட்டை வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பெண்
புவனேஸ்வரி(42). இவரின் கணவர் சுரேஷ் குமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்
நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து தனியாக வசித்து வரும் புவனேஸ்வரி தனது
வீட்டில் கழிப்பறை வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளி பெண் புவனேஸ்வரி தமிழக வெற்றிக்கழக மாவட்ட
பொறுப்பாளர் பர்வேஸ்- ஐ சந்தித்துள்ளார். பின்னர், கழிப்பறை கட்டித் தர வேண்டும் என
கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “எனக்கு எதுவும் தெரியாது; ஆனால் எங்கள் நீண்டகால நிலைப்பாடுதான்” – ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என பேசும் வீடியோ குறித்து #Thirumavalavan பதில்!

மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையை ஏற்று தமிழக வெற்றிக்கழக புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் பர்வேஸ் புதிய கழிப்பறையை கட்டிக் கொடுத்தார். மேலும் தேவைப்படும் உதவிகளை செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய மாற்றுத்திறனாளி பெண் புவனேஸ்வரி, தனது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் தமிழக வெற்றி கழகத்தில் தான் இணைய உள்ளதாகவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.