சினிமாவின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருதுகள் உள்ளன. அதன் படி 98 வது ஆஸ்கார் விருதுகள் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான திரைக்கலைஞர்கள் பங்குபெற்றுள்ளனர்.
இந்த நிலையில் பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ நடிப்பில் கடந்த ஆண்டு ஆண்டு வெளியான One Battle After Another திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
அதன் படி சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், துணை நடிகர், படத்தொகுப்பு , நடிகர்கள் தேர்வு மற்றும் தழுவல் திரைக்கதை ஆகிய 6 பிரிவுகளில் இப்படம் விருதுகளை வென்றுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் அதிக விருதுகளை வென்ற படம் என்ற சாதனையை படம் படைத்துள்ளது.








