தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா, நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்தார்.
ஊரடங்கு நீட்டிப்புக்கு வரவேற்பு தெரிவித்த அவர், ஏற்கனவே நடைமுறையில் உள்ள காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை போன்று, மளிகைப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இதற்காக பிரத்யேகமாக 4 தொலைபேசி எண்கள் அறிவிக்கப்படும் என்றும், அந்த எண்ணில் தொடர்பு கொண்டு மளிகை பொருட்கள் கிடைக்கவில்லை என புகாரளித்தால் உடனடியாக ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், இக்கட்டான சூழலை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்றால், அவர்கள் குறித்து புகாரளிக்கலாம் என்றும் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா குறிப்பிட்டார்







