குடி போதையில் தகராறு செய்த மகனை, தந்தையே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்த சரல்விளை பகுதியை சேர்ந்தவர் 80 வயதான சௌந்தர பாண்டியன். இவர் திருமணமாகாத 40 வயதான தனது மகன் நாகராஜன் உடன் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான நாகராஜன் அடிக்கடி குடிபோதையில் தந்தை சௌந்தர பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்று இரவு குடிபோதையில் வந்த நாகராஜன் தந்தை சௌந்தர பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில், ஆத்திரமடைந்த சௌந்தர பண்டியன் வீட்டில் இருந்த கோடாரியால் தனது மகன் நாகராஜன் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் நாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தந்தை சௌந்தர பாண்டியன் இரணியல் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த இரணியல் போலீசார் அவரை கைது செய்ததோடு நாகராஜன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.







