திண்டுக்கல் மாவட்டம் பழனி-கொடைக்கானல் சாலையில் அமைந்துள்ள வரதமாநதி அணை தற்போது பெய்த கோடை மழையினால் நிரம்பி வழிகிறது. இதனால் பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வரதமாநதி அணை. கிட்டதட்ட 67அடி கொள்ளளவு உடைய வரதமாநதி கடந்த ஆண்டு பொய்த்துப்போன பருவ மழையினால் முழுக் கொள்ளளவை எட்டாமல் போனது.இதனால் அணையை நம்பியுள்ள சுமார் 2000 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் நிலைமை கேள்விக்குறியானது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வந்த கன மழையினால் வரதமாநதி அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.இதனால் அணையின் நீர் மட்டம் மெல்ல,மெல்ல அதிகரித்து தற்போது அணை நிரம்ப வழிய தொடங்கியுள்ளது.அணைக்கு விநாடிக்கு வரும் 15கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இதனால் சுற்றுவட்டார கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். மேலும் திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பேரூதவியாக இருக்கும்.இதனால் விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
—வேந்தன்







