இந்தியாவுடனான போட்டியின் தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர் அழுதாரா? உண்மை என்ன?

இந்தியாவிற்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணியின் வீரர் கதறி அழுவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

Did the Pakistani player cry after the loss to India? What is the truth?

This News Fact Checked by ‘Newsmeter

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு, ஒரு பாகிஸ்தான் வீரர் டிரஸ்ஸிங் ரூமில் கதறி அழுததைக் காட்டும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் திங்களன்று நடந்த குரூப் ஏ போட்டியில் நியூசிலாந்து அணி வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2025ல் இருந்து வெளியேறியது. துபாயில் நடந்த ‘டூ-ஆர்-டை’ போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு, அரையிறுதிக்கு முன்னேறும் பாகிஸ்தானின் அணிக்கு எதிராக வங்கதேசம் ஒரு சாத்தியமற்ற வெற்றியை பெற்றது.

நடந்து வரும் போட்டிகளில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றங்களுக்கு மத்தியில், 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு, ஒரு பாகிஸ்தான் வீரர் டிரஸ்ஸிங் ரூமில் அழுததாகக் கூறும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

வீடியோவில், பச்சை நிற ஜெர்சி அணிந்த ஒரு கிரிக்கெட் வீரர், வீட்டிற்குள் லெக் பேட்களுடன் உணர்ச்சி வசப்பட்டு அழுவதாகவும், அவரது அணி வீரர்கள் அவருக்கு ஆறுதல் கூறுவதாகவும் வீடியோவில் காணலாம்.

“பாகிஸ்தான் அணியின் கிரீன் ரூமின் காட்சிகள். இன்று இந்தியாவிடம் தோற்றதற்காக வீரர்களில் ஒருவர் அழுவதைக் காணலாம்!! இது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது” என்ற தலைப்புடன் ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், “இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி அழுகிறது” என்று பதிவிடப்பட்டுள்ளது.

உண்மைச் சரிபார்ப்பு:

இந்தக் கூற்று தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது. காயம் காரணமாக நடந்து வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் இருந்து நீக்கப்பட்ட பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபக்கர் ஜமான் கண்ணீர் விடும் காட்சியை இந்த வீடியோ காட்டுகிறது.

வைரல் வீடியோவின் கீஃப்ரேமை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, ‘ஃபக்கர் ஜமான் பேரழிவிற்கு ஆளானார், ஆறுதலுக்கு இடமின்றி அழுகிறார், ஷாஹீன் உதவியற்றவர்; பாகிஸ்தான் டிரஸ்ஸிங் அறைக்குள் இதயத்தை உடைக்கும் காட்சிகள்’ என்ற தலைப்பில் இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட ஒரு கட்டுரையை கண்டறிய உதவியது. இது பிப்ரவரி 21, 2025 தேதியன்று வெளியிடப்பட்டிருந்தது.

நியூசிலாந்திற்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபியின் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டத்தின் போது ஆட்டமிழந்த பிறகு, ஃபகர் ஜமான் மைதானத்தை விட்டு வெளியேறியபோது அவர் ஆறுதல் அடைய முடியாமல் தவித்ததாக அந்தக் கட்டுரை குறிப்பிட்டது.

முக்கிய வார்த்தைகளைத் தேடியபோது, ​​பிப்ரவரி 21, 2025 அன்று பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் வெளியிட்ட இதேபோன்ற கட்டுரையை காணமுடிந்தது. ‘பார்க்கவும்: சாம்பியன்ஸ் டிராபி 2025 வெளியேற்றத்திற்குப் பிறகு ஃபக்கர் ஜமான் கண்ணீர் விட்டார்’ என்ற தலைப்பில் அது பதிவிடப்பட்டிருந்தது.

போட்டியின் முதல் ஓவரில் ஃபக்கர் ஜமான் ஃபீல்டிங் செய்யும் போது காயமடைந்து மைதானத்தில் சரிந்து விழுந்ததாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காயத்தைத் தொடர்ந்து, அவருக்கு தசை சுளுக்கு ஏற்பட்டதற்கான மதிப்பீடு செய்யப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) உறுதிப்படுத்தியது.

இரண்டு கட்டுரைகளிலும் ஃபக்கர் ஜமான் அவரது அணியின் வீரரால் ஆறுதல் கூறப்படுவதைக் காட்டும் வைரல் வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்கள் இருந்தன.

காயம் இருந்தபோதிலும், இடது கை பேட்ஸ்மேன் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்தார், ஆனால் 41 பந்துகளில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், மைக்கேல் பிரேஸ்வெல் அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

பிப்ரவரி 20, 2025 அன்று ட்விட்டரில் ஃபகர் ஜமான் போட்டியில் இருந்து வெளியேறியது குறித்து பகிரப்பட்ட ஒரு பதிவும் கிடைத்தது. அதில், “மிகப்பெரிய மேடையில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்துவது இந்த நாட்டின் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் மரியாதை மற்றும் கனவு. பாகிஸ்தானை பலமுறை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, நான் இப்போது ICC சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் இருந்து வெளியேறிவிட்டேன், ஆனால் நிச்சயமாக அல்லாஹ் சிறந்த திட்டமிடுபவர். வாய்ப்புக்கு நன்றி. நான் வீட்டிலிருந்து எங்கள் வீரர்களை பச்சை நிறத்தில் ஆதரிப்பேன். இது வெறும் ஆரம்பம் மட்டுமே; பின்னடைவை விட மீள்வருகை வலுவாக இருக்கும். பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என பதிவிடப்பட்டிருந்தது.

எனவே, வைரலாகும் இந்தக் கூற்று தவறானது. இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு, பாகிஸ்தான் வீரர் ஒருவர் டிரஸ்ஸிங் ரூமில் அழுவதை இந்த வீடியோ காட்டவில்லை; மாறாக, காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஃபகர் ஜமானின் உணர்ச்சிகரமான தருணத்தைப் படம்பிடித்து காட்டுகிறது.

Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.