திருச்சியில் சுத்தமற்ற தண்ணீரால் நோய்த் தொற்று அபாயம் – பொதுமக்கள் வேதனை!

திருச்சி அருகே துறையூரில் சுத்தமற்ற தண்ணீ்ரால் நோய்த் தொற்று அபாயம் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு வேண்டுகோள்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடேசபுரம் ஊராட்சி பகுதியில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக முறையாக குடிநீர் வரவில்லை என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.

மேலும் நீர்த்தேக்க தொட்டியை பராமரிக்காமல் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுவதாகவும் அதேபோல், குடிநீர் வழங்கும் கிணறு பாசிப்படர்ந்து சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, உடனடியாக குடிநீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கோடை காலம் தொடங்க இருப்பதால் தங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர். மேலும் அங்குள்ள ஆழ்துளை மின் மோட்டார்களை சரி செய்து குடிநீரை தொட்டிகளுக்கு ஏற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் அனைவரும் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.