தோனி, ரெய்னா சந்திப்பு – சமூகவலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் மகேந்திர சிங் தோனி,  ரெய்னா சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் கேப்டனாக தோனி செயல்பட்ட போது,  அணியின் தவிர்க்க முடியாத வீரராக…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் மகேந்திர சிங் தோனி,  ரெய்னா சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் கேப்டனாக தோனி செயல்பட்ட போது,  அணியின் தவிர்க்க முடியாத வீரராக ரெய்னா விளையாடினார்.  பல்வேறு போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு ரெய்னா காரணமாக இருந்துள்ளார்.  அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தலைமையில் பல ஆண்டுகள் துணைக் கேப்டனாக விளையாடியுள்ள ரெய்னா, ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  புதிய முயற்சியில் whatsapp | பொய் தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை… !!

விளையாட்டை தவிர்த்து தனிப்பட்ட வாழ்க்கையில் தோனியும்,  ரெய்னாவும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர்.   இருவரும் இந்திய அணியிலிருந்து ஒரே நாளில் ஓய்வும் பெற்றனர்.  இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும்,  இதன்காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவை ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் பரவின.

கடந்த ஐபிஎல் சீசனில் வர்ணனையாளராக செயல்பட்ட ரெய்னா தோனியை சந்தித்துப் பேசி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.   இந்த நிலையில், ராஞ்சியில் உள்ள தோனியின் இல்லத்துக்கு நேரில் சென்ற ரெய்னா அவரை சந்தித்துப் பேசினார்.  அப்போது தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ரெய்னா,  இரவு விருந்துக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.   இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.