“பிளாஸ்டிக் இல்லாத தருமபுரி” விழிப்புணர்வு மாரத்தானை துவங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்!

தருமபுரி மாவட்டத்தில் மறுசுழற்சியற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு மாரத்தானை மாவட்ட ஆட்சியர் சாந்தி துவங்கி வைத்தார். தமிழக அரசின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் செயல்படுத்தப்பட்டு…

தருமபுரி மாவட்டத்தில் மறுசுழற்சியற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு மாரத்தானை மாவட்ட ஆட்சியர் சாந்தி துவங்கி வைத்தார்.

தமிழக அரசின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகங்களுக்கும் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தருமபுரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் ஆகியவை இணைந்து பிளாஸ்டிக் எதிர்ப்பு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு மாரத்தானுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் பங்கேற்றவர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், இயற்கை சார்ந்த மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும் எனவும், வருங்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்கள் யாவும் பாதிக்காத வகையில் என்னுடைய அன்றாட செயல்பாடுகளை மாற்றி அமைத்து செயல்படுவேன் என்றும் உறுதிமொழி ஏற்றனர்.

அதனைதொடர்ந்து நடைபெற்ற மாரத்தான் போட்டியையும் மாவட்ட ஆட்சியர் சாந்தி கொடியசைத்து தவக்கி வைத்தார். மாரத்தான் ஆட்சியர் அலுவலகம் முதல் அரசு மருத்துவமனை வழியாக வந்து விளையாட்டு மைதானத்தில் முடிவுற்றது.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்,பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.