பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி பகுதியில் பஜ்ஜி மிளகாய் சாகுபடியில் கூடுதல் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு, தக்காளி, நெல் மற்றும் பூக்கள் அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது மாற்று பயிரைத் தேடி குளிர் பிரதேசங்களில் வளரும் பஜ்ஜி மிளகாய் சாகுபடியில் பஞ்சப்பள்ளி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பஜ்ஜி மிளகாய் நடவு செய்த 60-வது நாளில் இருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மிளகாய் அறுவடை செய்யப்படுவதாகவும் 1 ஏக்கருக்கு 40 டன் வரை மிளகாய் விளைச்சல் கிடைப்பதால் மார்க்கெட்டில் மிளாய்க்கு நல்ல வரவேற்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு ஏக்கர் மிளகாய் சாகுபடி செய்ய மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளிடமிருந்து 20ரூபாய்க்கு கொள்முதல் செய்து மார்க்கெட்டில் கிலோ 35
ரூபாய் வீதம் விற்பனை செய்கின்றனர். பஜ்ஜி மிளகாய் விவசாயத்தில் நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரெ. வீரம்மாதேவி







