தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்களித்த முக்கிய வேட்பாளர்கள்!

தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் திமுக, தவெக, அதிமுக, சிபிஐ வேட்பாளர்கள வாக்களித்தனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் நிலவிய சலசலப்பு காரணமாக மதுராந்தகம், தாராபுரம், விராலிமலை, கரூர் உள்ளிட்ட 6 தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உட்பட 7 தொகுதிகள் காலியனதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளை தவிர மற்ற 5 தொகுதிகளில் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது.

அந்தன்படி இன்று காலை 7 மணி முதல் இரண்டு தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் தாராபுரம் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியதும் திமுக வேட்பாளர் சுகன்யா தளவாய் பட்டினம் ஆரம்ப பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். அதேபோல தவெக வேட்பாளர் சத்தியபாமா மதுக்கம் பாளையம் பள்ளியிலும், அதிமுக வேட்பாளர் பானுமதி வீராச்சாமிமங்கலம் நடுநிலைப் பள்ளியிலும், சிபிஐ வேட்பாளர் லட்சுமணன் தொப்பம்பட்டி, கொல்லப்பட்டி அரசு பள்ளியிலும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

தாராபுரத்தில் மொத்தம் 302 வக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடிபெற்று வருகிறது. 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.