தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டி வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் விஜய் கடந்த 25-ஆம் தேதி மதுராந்தகத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கோள்ள உள்ளார்.
முதலமைச்சர் விஜயின் வருகையை ஒட்டி தாராபுரம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள். பிரச்சாரம் நடைபெறும் திடலில் அனுமதி சீட்டு பெற்ற 5000 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் 3500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தாராபுரத்தில் பிரச்சார்ம் மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டார். முதலமைச்சரை வரவேற்க தவெக தொண்டர்கள் விமான நிலைய வாசலில் குவிந்ததால் அப்பகுதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து தாராபுரத்திற்கு சாலை மார்க்கமாக செல்கிறார். பாதுகாப்பு கருதி சாலையின் இருபுரமும் தடுப்பு வேளிகள் அமைக்கப்பட்டு வழியில் உள்ள கடைகள் மூடப்பட்டுள்ளன.




