தொடர் விடுமுறையின் காரணமாக திருநள்ளாறு சனிஸ்வரன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உலக புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் சன்னிதானம் அமைந்துள்ளது. தொடர் விடுமுறையின் காரணமாக இன்று அதிகாலை முதலே சனீஸ்வர பகவான் தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாற்றில் குவிந்தனர்.
இதன் காரணமாக கோவில் அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் தொடரந்து நடைபெற்று வருகிறது. புனித நலன் தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராடி நீணட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்துனர்.
கொரோன பரவல் காரணமாக புதுச்சேரி அரசு பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய உத்தரவிட்டிருப்பதால் கோவிலுக்குள் முக கவசம் அணிந்தவர்களை மட்டுமே அனுமதித்தனர். மேலும் சனீஸ்வரர் பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
—அனகா காளமேகன்







